தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.34.85 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர் கே.சி. வீரமணி அடிக்கல்! - jal jeevan mission in thirupattur

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் கீழ், ரூ.34.85 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கே.சி. வீரமணி அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் திட்டத்திற்கு கே.சி. வீரமணி அடிக்கல்
குடிநீர் திட்டத்திற்கு கே.சி. வீரமணி அடிக்கல்

By

Published : Sep 18, 2020, 4:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் கீழ், குடிநீர் திட்டப் பணிகளுக்காக மொத்தம் 6 ஒன்றியங்களுக்கு ரூ. 34.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தில் முதல்கட்டமாக ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரி-முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்ட திட்டமிடப்பட்டது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தினால் மொத்தம் 331 குக்கிராமங்கள் இணைக்கப்பட்டு 31 ஊராட்சிகளுக்குட்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருப்பத்தூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details