தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் காயமுற்ற மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்..! - சாலை விபத்து

வாணியம்பாடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அனுப்பி வைத்தார்.

சாலை விபத்தில் அடிப்பட்ட மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்..!
சாலை விபத்தில் அடிப்பட்ட மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்..!

By

Published : May 29, 2022, 10:59 PM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு வழிப்பாதை சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேர்ணாம்பட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இஸ்மாயில், அஜ்மல் ஆகியோர், ஏலகிரி மலைக்குச் சுற்றுலா சென்றனர்.

அப்போது வேப்பம்பட்டு அருகே எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இஸ்மாயில் (21) என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்தில் அடிப்பட்ட மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்..!

அப்போது அவ்வழியாக திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனடியாக காரை நிறுத்தி விபத்தில் படுகாயம் அடைந்த அஜ்மலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முருகனுக்கு பரோல் வழங்ககோரி நளினி மனு!

ABOUT THE AUTHOR

...view details