திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திருமாஞ்சோலைப் பகுதியில் நகர கழகச் செயலாளர் சதாசிவம் தலைமையில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை, இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், "யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம்; அது அவர்களது உரிமை. தற்போது நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்குவது பேஷனாகிவிட்டது.
ரஜினி கட்சி ஆரம்பித்து அனைவருக்கும் கும்பிடு போட்டுவிட்டு நாமம் போட்டுவிட்டு காணாமல்போய்விட்டார். அடுத்ததாக கமல்ஹாசன் ஒரு கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்குகிறேன் என்று சொல்கிறார்.