வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த மக்களை சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையவும் அவர் கேட்டுக்கொண்டார்.
'அடுத்தும் அதிமுக ஆட்சிதான்' - அமைச்சர் நிலோஃபர் கபில் நம்பிக்கை! - election 2021
திருப்பத்தூர்: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மகளிர் குழுக்களில் உள்ள பெண்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலமாக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிய அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், திமுகவால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்ற அமைச்சர், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை பரப்புகிறார் உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்