திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான ஊட்டச்சத்து மாவு வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஊட்டசத்து மாவு பாக்கெட்டுகளை வழங்கினார். விழாவில் பேசிய அவர், "பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை எந்தெந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
குழந்தைகள் கருவில் இருக்கும்போதே குழந்தைக்குத் தேவையான சத்தான உணவுகள், தடுப்பூசி உள்ளிட்டவைகளை அளிக்கக்கூடிய வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல் பெண்களுக்கு கர்பிணி காலத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கி அவர்களை மாதம்தோறும் பரிசோதித்து வருகின்றனர்.
மேலும் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சஞ்சீவி பெட்டகத்தை வழங்கி வருகிறார்.கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கிவரும் நிலையில், தற்போது, முதியோர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது" என்றார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, சுப்பிரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'ஓபிஎஸ்-இபிஎஸ் என்ன சொல்கிறார்களோ அதுதான் எங்களுக்கு வேதம்!'