தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் விலை உயர்ந்தாலும் மாணவிகளுக்கு 1 சவரன் தங்கம் - அமைச்சர் நிலோபர் கபில் - Minister Nilofar Kapil donates free bicycles to students

திருப்பத்தூர்: தங்க நகை விலை உயர்ந்தாலும் மாணவிகளுக்கு கல்வியில் ஊக்கமளிக்கவே 1 சவரன் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

nilofer kabil
nilofer kabil

By

Published : Dec 31, 2020, 10:36 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் நிதியுதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 3ஆயிரத்து 31 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வாணியம்பாடி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.

பின்னர் மாணவர்கள் முன்பு பேசிய அமைச்சர் நிலோபர் கபில், "மாணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைந்தால்தான் மாநிலமும் தேசமும் வளர்ச்சி பெறும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளது. பள்ளியில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை உடைத்து அனைவரும் சமம் என்பதை நிலைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து திட்டங்களும் செய்லபடுத்தப்படுகிறது.

தங்க நகை விலை உயர்ந்தாலும் மாணவிகளுக்கு கல்வியில் ஊக்கமளிக்கவே 1 சவரன் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உங்களின் நேரத்தை வீணடிக்காமல் படித்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். எத்தனை முறை முயற்சி செய்தாலும் அத்தனை முறையும் வெற்றி பெறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:'எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஆளுங்கட்சியின் கருவி அமலாக்கத்துறை'- மெகபூபா முப்தி கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details