திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவனருள் தலைமையில் சுற்றுலாத் துறையின் சார்பாக பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடு கலாச்சாரங்களை நினைவுகூறும் வகையில் மயில் ஆட்டம், சிலம்பாட்டம், கரகம், தெருக்கூத்து, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், மான் கொம்பு போன்ற கலைகளை செய்து காட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை, மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 250 பேருக்கு மேல் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடட்டம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
இந்தக் கொண்டாட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே. சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விழா அரங்கத்திற்கு காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் தாரை தப்பட்டைகள் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் கே. சி. வீரமணி பேசுகையில், தமிழர்களின் பாரம்பரியப் பண்பாடு கலாச்சாரங்களை நாம் மறந்துவிட்டோமோ என்கிற பயம் எல்லார் மத்தியிலும் இருக்கும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி முதல்முறையாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடக்கும் பழமை வாய்ந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.