திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணை சுமார் சுமார் 112.20 அடி உயரம் கொண்டது.
வடகிழக்கு பருவமழையால் இந்த அணை இன்று (டிச.5) காலை நிரம்பியது. இதனை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு சுற்றுலா வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் சிவன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்ததாவது, "ஆண்டியப்பனூர் நீர்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு அருகே பாம்பாற்றில் இணைந்து பெண்ணையாற்றில் கலக்கிறது. சாஹிப் கால்வாய் மூலம் ஒன்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.