திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்துறை பயனாளிகளுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமையில் நவ. 09 ஆம் தேதி, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற துறைகளில் உள்ள 3,660 பயனாளிகளுக்கு 32 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று, இலவச வீட்டு மனை பட்டா, இலவச சலவைப் பெட்டி, மூன்று சக்கர வாகனம் என்று 66 பயனாளிகளுக்கு ரூ. 49 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று முற்றிலும் குறையவில்லை என்றும் குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோய்த்தொற்று உள்ளது என்று கூறினார்.