ஆம்பூரில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது, ஆலங்குப்பம். இப்பகுதியில் சேலத்திலிருந்து வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பார்சல் வேன் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்! - தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகன விபத்து
இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிவந்த ஆம்பூர் சானாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தாரகன் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.