ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று(ஆக.14) கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரிலிருந்து திருப்பதி நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு (SETC) பேருந்தில் ஏறி வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார்.
அப்போது மாணவி இரவில் உறங்கும் நேரம் பார்த்து அதே பேருந்தில் ஸ்டெப்ணி ஓட்டுநராக பணியாற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் பகுதி மேட்டு தெருவை சேர்ந்த நீலமேகம் (46) என்பவர் மாணவியின் அருகில் அமர்ந்து சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.