தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருள்களான மருந்து, பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ஆம்பூரில் ஊரடங்கு விதி மீறல்: இறைச்சி கடைகளுக்கு சீல்! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்: ஆம்பூரில், கரோனா ஊரடங்கை விதிகளை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
இறைச்சி கடைகள்
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோடு, பஜார், மோட்டு கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளின் ஷட்டரை சாத்திவிட்டு வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலத்தில், இருமடங்கு விலைக்கு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில், பஜார் பகுதியில் கடையை முழுவதுமாகவே திறந்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு, ஆம்பூர் வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.