தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கருணாநிதி குடும்பத்தைவிட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல்" - கே.சி.வீரமணி சரவெடி! - கேசி வீரமணி

கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

கருணாநிதி குடும்பத்தைவிட மன்னார்குடி... முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
கருணாநிதி குடும்பத்தைவிட மன்னார்குடி... முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

By

Published : Dec 21, 2022, 12:37 PM IST

Updated : Dec 21, 2022, 4:25 PM IST

வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும் மற்றும் பல்வேறு வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் மாவட்டங்கள்தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும் மற்றும் பல்வேறு வகையிலான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுக கட்சி மட்டும்தான். ஆனால் அதில் ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் பெற்று, அதனை அடைக்க சொத்து வரி, வீட்டு வரி போன்று விலைவாசியை உயர்த்தியுள்ளனர். கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல்” எனத் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?

Last Updated : Dec 21, 2022, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details