திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெலக்கல் நத்தம் பகுதியில் வசித்துவருபவர் அன்பழகன்(45). இவருக்கு சரிதா(40) என்ற மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
இதில் முதல் இரண்டு ஆண் பிள்ளைகள் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் நிலையில் கடைசி மகன் இளவரசு(21) ஜேசிபி ஓட்டுநராகப் பணி செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சரிதா தன் கணவன் மீது சந்தேகப்படுவதால், அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அன்பழகன் வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள வீட்டில் கடந்த 6 மாதமாக தனியாக வசித்து வந்துள்ளார்.