ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு, முகத்தில் காயங்களுடன் பற்கள் உடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல கூறியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அனுப்ப ஏற்பாடுகள் செய்த நிலையில், அவருடன் மருத்துவமனைக்குச் செல்ல யாரும் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர், காயங்களுடன் ஆம்பூர் நகராட்சி சாலை ஓரத்தில் படுத்துள்ளார். வெகு நேரமாகியும் அவர் அதே இடத்தில் படுத்திருந்தது கண்டு, அவ்வழியே சென்றவர்கள் ஆம்பூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது அந்த நபர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் உடலை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.