திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(24). இவருக்குச் சொந்தமாக 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தினேஷ்க்கும் அவரது உறவினருக்கும் நிலம் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
உயர் கோபரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி! - youth attempted suicide at Tirupattur
திருப்பத்தூர்: மின் உயர் கோபரத்தில் ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மன உளைச்சல் அடைந்த தினேஷ் அதே பகுதியில் உள்ள மின் உயர் கோபரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் அவருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பிரச்னை குறித்து உடனடி தீர்வு கிடைக்கும் எனக் கூறினர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். மின் உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இணைய வழி சூதாட்டம்: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்!