திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம், காப்புக்காடு, மத்தூர், தேவுடு, கானாறு பகுதியிலுள்ள வனப்பகுதிக்கு தீ வைத்துவிட்டு, அங்கிருந்து வரும் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது - Man arrested for hunting wild animals
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் தீ வைத்து வன உயிரினங்களை வேட்டையாடி வந்தவரை வனத்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
Man arrested for hunting wild animals
இதனையடுத்து, காப்புக்காட்டு பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சின்ன கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த அபிமன்னன் என்பவர் கையில் துப்பாக்கியுடன் காப்புக்காட்டு பகுதியில் சுற்றிதிரிந்தை கண்டு அவர் கைது செய்யப்பட்டார்கை.
பின்னர், அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, ஆம்பூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.