திருப்பத்தூர் மற்றும் ஆம்பூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகள் திருப்பத்தூர்:கர்நாடக மாநிலம் ஒயிட்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த பிரணம் குடும்பத்தினர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொகுசு காரில் சென்னைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில், சுற்றுலா முடிந்து குடும்பத்தினர் இன்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சிறிய கல் இருந்ததாக தெரிகிறது. அதன் மீது காரை ஏற்றாமல் இருக்க, இடதுபுறம் காரை திருப்பி உள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியத்தின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்க பணம் கொடுக்காதால் மகன் வெறிச்செயல் - நடந்தது என்ன?
இந்த நிலையில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதையடுத்து, அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர் செய்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார், காரை மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் காலனி தொழிற்சாலைக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்பக்கம் லாரி மோதிய விபத்தில் பெண் காலனி தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: காருக்குள் கட்டுகட்டாக பணம்.. பெண் அதிகாரியை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் நடந்தது என்ன?