திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வளையாம் பட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6:30 மணியளவில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரியின் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவிலேயே நின்றது. பின்னர் லாரி ஓட்டுநர் மற்றும் காற்றாலை இறக்கை பாதுகாப்பிற்காக வந்த ஊழியர்கள் லாரி என்ஜினில் ஏற்பட்ட பழுதினை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் சரி செய்தனர்.