தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருணாநிதி போல் ஸ்டாலின் பொய் பரப்புரை மேற்கொள்கிறார்' - அமைச்சர் கே.சி. வீரமணி குற்றச்சாட்டு - கருணாநிதி போல் ஸ்டாலின் பொய் பரப்புரை மேற்கொள்கிறார்

திருப்பத்தூர்: 2006ஆம் ஆண்டு தேர்தலின்போது இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறி கருணாநிதி வாக்குகளை பெற்று ஏமாற்றியது போல, அவரது மகன் ஸ்டாலினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசிய வங்கிகளில் உள்ள கடன்களை ரத்து செய்வதாக பொய் பரப்புரை செய்து வெற்றி பெற்று விட்டார் என, அமைச்சர் கே.சி. வீரமணி குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் கே.சி. வீரமணி
அமைச்சர் கே.சி. வீரமணி

By

Published : Dec 31, 2020, 10:29 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், மாதனுர் கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் அதிமுக தேர்தல் கழக செயல் வீரர்கள் கூட்டம் நகர ஒன்றிய கழக செயலாளர்கள் தலைமையில் இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்று 2021 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி சீரிய முறையில் நிறைவேற்றியும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று செல்வாக்கு கூடுவதால், இதை பொறுத்துக் கொள்ளாத திமுகவினர் அச்சப்படுகின்றனர்.

மன்னர்கள் ஆட்சிக் காலத்துக்கு பிறகு வரும் காலங்களில் விவசாயத்தை பாதுகாக்கவும், நீர்நிலைகளை உருவாக்கவும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம், குட்டை ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதுடன் சிறப்பு மிக்க திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு பேசினார்.

அமைச்சர் கே.சி. வீரமணி

2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக பொய் சொல்லி வாக்குகளை பெற்று கருணாநிதி ஏமாற்றியது போல, அவரது மகன் ஸ்டாலினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிராமசபை கூட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்டி தேசிய வங்கிகளில் உள்ள கடன்களை ரத்து செய்வதாக பொதுமக்கள் மத்தியில் பொய் பரப்புரை செய்து வெற்றி பெற்று விட்டார். அதே பாணியில், தற்போது நடைபெறயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கிராம சபை கூட்டம் கூட்டி பொய் பரப்புரை செய்து வருகிறார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details