தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணையதளம் துவக்கம் - தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணையதளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா

By

Published : Sep 9, 2020, 10:05 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆறு நல்லாசிரியர்களுக்கான விருதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தை தன்னிச்சையாக இயங்க இணைய தளத்தையும் திருப்பத்தூர் ஆட்சிர் சிவனருள் முன்னிலையில் பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்து ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விருது பெற்ற ஆசிரியரின் விவரங்கள் வருமாறு:

*குழந்தைசாமி தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி

*பொற்செல்வி முதுகலை ஆசிரியர் மேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்

*ஜை புண்ணிசா தலைமை ஆசிரியர் நகராட்சி முஸ்லிம் மற்றும் நடுநிலைப்பள்ளி வாணியம்பாடி

* சகாயம் இடைநிலை ஆசிரியை மேரி இமாகுலேட் மற்றும் நடுநிலை பள்ளி திருப்பத்தூர்

* ஷரீபாபானு தலைமை ஆசிரியர் ஹஸ்ணத் நிஜரியா நிதியுதவி தொடக்கப்பள்ளி ஆம்பூர்

* பிரபுதாஸ் மலர்வெந்தன் தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மூப்பற்காலனி பெறநாம்பட்டு.

ஆகிய 6 ஆசிரியர்களை தேர்வு செய்து தமிழ்நாட்டின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதனுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இயங்கிக் கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் இன்று (செப்டம்பர் 9) முதல் தன்னிச்சையாக இயங்க இணையதளம் துவங்கப்பட்டு ஐந்து துணை ஆட்சியர்களுக்கான வாகனம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details