திருப்பத்தூர்: மழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவருகிறது. ஆனால் விடுமுறை அறிவிப்பானது தாமதமாக சில மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
அந்த வரிசையில் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தாமதமாகவே விடுமுறை அறிவித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொலைவிலுள்ள பள்ளிக்குச் செல்ல காலை 7 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தாமதமாக சுமார் 8 மணி அளவிலேயே விடுமுறை அறிவிப்பதால் (late announcement) அனைத்துத் தரப்பினரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.