திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் நேற்று(டிச.12) ராமமூர்த்தி என்ற விவசாயி நிலத்தகராறில் இருந்த முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராம மூர்த்தியின் மனைவி பூங்கோதை ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாவின் கணவர் பாரி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.