பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம் திருப்பத்தூர்: மாண்டஸ் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்பு வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு ஆந்திர எல்லையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி புல்லூர் வழியாக பாலாற்றில் 4,980 கனஅடி நீர்வரத்து உள்ளது.
இதனால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உள்ள 3-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் பாலாறு வெள்ளத்தால் முழுவதும் மூழ்கின. ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சற்றும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக அவ்வழியாக செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!