திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (36). இவர் ஆலங்காயம் பகுதியிலுள்ள இவருடைய உறவினர் இறுதிச்சடங்கு காரியத்திற்கு இவரது மனைவி கல்பனா (33), மகன் மகேஷ் (10) இரண்டாவது மகள் தமிழிசை (6), தாயார் இந்திராணி (55) ஆகிய அனைவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஆலங்காயம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது திருப்பத்தூரை அடுத்த சி.கே.சி. திரையரங்கம் எதிரில் செல்லும்போது நிலைதடுமாறி தேங்காய் பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி, சுரேஷின் தாயார் இந்திராணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சுரேஷுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இவரின் இரண்டு குழந்தைகளும், மனைவியும் லேசான காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.