தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் துரை முருகனும் ரகசிய உறவு'- குற்றஞ்சாட்டும் நிலோபர் கபில் - வாணியம்பாடி அதிமுக வேட்பாளர்

அமைச்சர் கே.சி. வீரமணிக்கும், திமுக பொதுச் செயலாளர் துரை முருகனும் ரகசிய உறவு உள்ளதாகவும், திமுகவின் வெற்றிக்காக சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள அதிமுக வேட்பாளர்களை கே.சி. வீரமணி நிறுத்தியுள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Nilofer Kafeel
Nilofer Kafeel

By

Published : Mar 13, 2021, 4:52 PM IST

திருப்பத்தூர்:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அண்மையில் அதிமுக தலைமை அறிவித்தது. இதில், வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக செந்தில் குமார் என்பவரை அதிமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இன்று (மார்ச் 12) செய்தியாளர்களை சந்தித்து கண்ணீர் மல்க பேசினார். அப்போது, "தன்னை கட்சியில் இருந்து நீக்கவே திட்டமிட்டு என் மீது அமைச்சர் வீரமணி பழி சுமத்தி வருகிறார். இதற்காக அவர் என் மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால், அமைச்சர் வீரமணி திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுடன் மாமா, மச்சான் என்கிற வகையில் உறவில் இருக்கிறார்.

அமைச்சர் நிலோபர் கபில் செய்தியாளர்கள் சந்திப்பு

ஏலகிரி மலையில் உள்ள சொகுசு விடுதியில் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் உடன் பல்வேறு டீலிங் பேசுகிறார். சில தொகுதியில் திமுக வெற்றி பெறவே அதிமுகவில் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். தன்னைக் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அமைச்சர் கே.சி. வீரமணி ஒரு தினசரி நாளிதழுக்கு தவறான பேட்டியை அளித்துள்ளார்.

விளம்பர பேனர்கள் முதல் ஆலோசனை கூட்டங்கள்வரை என்னை அமைச்சர் வீரமணி புறக்கணித்து வருகிறார். என்னுடைய புகைப்படத்தை யாரவது போட்டால் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். எனக்கு அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்பு வருவதாகவும் கூறுகிறார். ஆனால், நான் அதிமுக விசுவாசி. அதிமுகவிற்கு பணியாற்றி, அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வேன். அதிமுக தலைமை சரியாக உள்ளது. தலைமை மீது எந்த குற்றசாட்டும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர் நிலோபர் கபில் : தொண்டர்கள் கொந்தளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details