தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணி: அமைச்சர் ஆய்வு - Panchayat Union office building

திருப்பத்தூர்: ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 2.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

By

Published : Oct 2, 2020, 11:39 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிகுள்பட்ட பகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில், முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இதற்காக 2.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது அது முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார். இதையொட்டி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் கட்டட பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details