திருப்பத்துார் அடுத்த வாணியம்பாடி பகுதியில் உள்ள அலச்சந்தாபுரம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் நேற்று இரவு உள்பக்க கதவை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை கோயிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி, கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர், உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பக்தர்கள் காணிக்கை பணம் கொள்ளை - thiruppaatur temple case
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துார்: வாணியம்பாடி அருகே மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்கள் காணிக்கை செலுத்திய 30,000 பணம் கொள்ளை
இதுகுறித்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்க:ஆவடி முருகன் கோயிலில் 20 கிலோ வெள்ளி கவசம், உண்டியல் பணம் கொள்ளை!