தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்! - சூரசம்ஹாரம் திருவிழா

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் திருவிழா கொண்டாட்டம்
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் திருவிழா கொண்டாட்டம்

By

Published : Nov 21, 2020, 11:13 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா தகுந்த இடைவெளியுடன் நடைபெற்றது.

சூரசம்ஹாரம் திருவிழா கொண்டாட்டம்

இவ்விழாவில் கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், பத்மாசூரன் உள்ளிட்ட அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், உற்சவமூர்த்தி ஆலயத்தை வலம் வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் நிகழ்ச்சியை கண்டுகளித்து, அரோகரா என்று சரவண கோஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

இதையும் படிங்க: பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார திருவிழா

ABOUT THE AUTHOR

...view details