திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் மைவண்ணகுமார்(65). இவருக்கு, ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தின், அருகே கடந்த ஆட்சியில் மங்கம்மாள் என்ற குளம் நிறுவப்பட்டது.
ஆனால், குளம் தோண்டிய மண்ணை மைவண்ணகுமார் நிலத்தின் அருகே கொட்டி குளத்திறக்குச் செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. மங்கம்மாள் குளம் அமைக்கப்பட்ட இடம் மைவண்ணகுமாரின் இடத்தைவிட உயரமானதால் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் மழைநீர் தாழ்வான பகுதியான மைவண்ணகுமார் நிலத்தில் கால் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.