தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற வடமாநில இளைஞரை தொழில் முனைவோராக மாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்! - north indian committed suicide case

மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற வட மாநில இளைஞர் கருணை இல்லத்தில் 3 மாத மனநல சிகிச்சைக்கு பின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

vaniyambadi
மனநல பாதித்து தற்கொலைக்கு முயன்ற வட மாநிலத்தவர்

By

Published : Mar 30, 2023, 8:31 AM IST

மனநலம் பாதித்து தற்கொலைக்கு முயன்ற வட மாநிலத்தவருக்கு சிகிச்சை அளித்து சொந்த ஊருக்கு அனுப்பிய அரசு!

திருப்பத்தூர்: கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் பார்த்து அந்த இளைஞரை மீட்டு அவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த வடமாநில இளைஞரைக் கருணை இல்ல இயக்குநர் டேவிட் சுபாஷ் என்பவரின் மேற்பார்வையில் ஒரு மாத காலமாக மனநல மருத்துவர்கள் உரியச் சிகிச்சை அளித்தனர். பின்னர் தொடர் சிகிச்சையிலிருந்த வடமாநில இளைஞர் மனநலம் முற்றிலும் குணமடைந்தார். இந்நிலையில் அவரிடம் மனநல காப்பக இயக்குநர் டேவிட் சுபாஷ் விசாரணை மேற்கொண்ட போது, "அவர் பெயர் சிவதாஸ் பண்டாரி என்பதும், ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

சொந்த கிராமத்தில் முடிதிருத்தும் வேலை பார்த்து வந்த சிவதாஸ், காப்பகத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் முழுவதுமாக குணமடைந்து கருணை இல்லத்தில் உள்ள நபர்களுக்குக் கடந்த சில மாதங்களாக முடி திருத்தும் பணியில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

சிவதாஸ் பண்டாரியைச் சொந்த கிராமத்திற்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருணை இல்ல நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சிவதாஸ் பண்டாரியை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, புதன்கிழமை கருணை இல்ல நிர்வாகிகள் மற்றும் வாணியம்பாடி காவல்துறையினர் ஆகியோர் இணைந்து சிவதாஸ் பண்டாரியை அவரது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்துக்கு வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அனுப்பி வைத்தனர்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் தற்போது குணமாகி மீண்டும் தனது தொழிலை சிறப்பாக செய்து வரும் நிலையில் சொந்த ஊருக்கு சென்று கடை வைத்து தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ள கருணை இல்லத்தின் செயல்பாடு காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் - அமைச்சர் சி.வி.கணேசன்

ABOUT THE AUTHOR

...view details