திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையத்தில் வசித்து வருபவர், காளிமுத்து.
டையிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காளிமுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறுமுத்தாம்பாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுள்ளார்.
மதுரையில் இருந்து பல்லடத்திற்குத் திரும்பிய அவர் வீட்டிற்குச்சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ, அலமாரிகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.