திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பாலூர் ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (28). இருளர் இனத்தை சார்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டம் கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விஜயன் வீடு திரும்பாததால், அவரை காண அவரது உறவினர்கள் கன்னிகடா கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு அவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அதோடு விஜயனை காண சென்ற உறவினர்களும் கொத்தடிமைகளாக மாட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் சம்பத் என்பவர் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில், இந்த சம்பவம் குறித்து மனு அளித்துள்ளார்.