திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (27) வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ரூபினி (23) சேலத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
சக்திவேல் - ரூபினி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காதல் ஜோடி வீட்டை வெளியேறி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.