தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாரத சாரண, சாரணியர் இயக்கம் - பாரத சாரண சாரணியர் இயக்கம்

திருப்பத்தூர் : கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்

By

Published : Aug 7, 2020, 8:24 PM IST

கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள் பலரும் முன் வந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியாக அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

நிவாரணப் பொருள்கள் வழங்கிய பாரத சாரண சாரணியர் இயக்கத்தினர்
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை, கீழானூர் கிராமத்தில் வசிக்கும் 150 மலைவாழ் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கடுகு, உப்பு, முகக்கவசம் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் தொகுப்பினை, சென்னை மாநகராட்சி, பாரத சாரண சாரணிய இயக்கத்தினரும், மத்திய இந்தியானா இயக்கத்தினரும் இணைந்து வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details