தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி ஆர்ப்பாட்டம் - வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Indian National League party protest
Indian National League party protest

By

Published : Dec 26, 2020, 12:46 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் அயூப்கான், நகர செயலாளர் சல்மான் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர தலைவர் ரிஸ்வான் முன்னிலை வகித்தார்.

அப்போது, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் அஸ்லம் பாஷா, வேளான் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து உரை நிகழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details