தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 வயது மூதாட்டி! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் 100 வயதைக் கடந்த மூதாட்டி அன்னம்மாள், தானாக முன்வந்து கரோனா தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டது செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

100 aged lady annammal voluntarily vaccinated, tirupattur 100 aged lady annammal, திருப்பத்தூரில் தானாக முன்வந்து தடுப்பூசி போட்ட100 வயது பாட்டி அன்னம்மாள்
அசர வைத்த அன்னம்மாள்

By

Published : Nov 29, 2021, 9:16 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டாவது கரோனா தொற்று மெகா தடுப்பூசி முகாம், வீடு வீடாகச் சென்றும், நிரந்தர முகாம்களிலும் மருத்துவக்குழு மூலமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (நவம்பர் 28) நடைபெற்றது.

இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 100 வயதைக் கடந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, கரோனா தொற்று தடுப்பூசியைத் தானாக முன்வந்து செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையா? - அன்னம்மாளின் அறிவுரை

இளம் வயதினரே, பல காரணங்களைக் கூறி தடுப்பூசியைச் செலுத்த முன்வராமல் இருக்கும் சூழ்நிலையில், 100 வயதைக் கடந்த மூதாட்டி கரோனா தொற்று தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டது அங்கிருந்த செவிலியர், மருத்துவர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்று பொதுமக்களும் தானாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறி அன்னம்மாள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: Omicron Variant virus: கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details