தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய இருவர் கைது! - Tirupattur Latest News

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய இருவரைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

illegal sand theft and tractor seized in Tirupattur
illegal sand theft and tractor seized in Tirupattur

By

Published : Aug 5, 2020, 6:46 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கரோனா நோய் தடுப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றுப் பகுதிகளிலிருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் உத்தரவின் பேரில், நகர காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெருமாள்பேட்டை பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (26), மகேந்திரன் (29) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details