திருப்பத்தூர்: பேராம்பட்டு ப.வு.ச. நகரைச் சேர்ந்த சின்னான் மகள் செல்வி, ராஜா மனைவி சாமுண்டி ஆகியோர் வெளிமாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்திவந்து வீட்டினுள் வைத்து இரவும் பகலும் விற்பனை செய்துவருகின்றனர்.
விற்பனை செய்யும் பகுதி திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் மது வாங்க வருவோரால் திருட்டுச் சம்பவம் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது.