வேலூர்: இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் ( IFS) என்ற தனியார் நிதி நிறுவனம் வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் வாடிக்கையாளரிடம் முதலீட்டாய் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், மாதம் 8,000 ரூபாய் தருவதாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோரிடம் முதலீட்டை பெற்று மோசடி செய்து வந்துள்ளது.
இதுதொடர்பான புகாரை அடுத்து தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், நேற்று (ஆகஸ்ட்5) காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, அவர்களின் வீடுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
முக்கியமாக காஞ்சிபுரத்தில் மின்மினி சரவணன் என்பவரது வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நிறுவனத்தை நடத்தி வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் வீட்டில் பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர்.