தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை! - ISRO

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே ஏற்படும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை!
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை!

By

Published : Aug 2, 2022, 10:00 AM IST

திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தா உள்ளரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு, 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை படித்து முடித்த 766 பட்டதாரிகளுக்கும், 191 முதுகலைப் பட்டதாரிகளுக்கும், 16 எம்.பில் பட்டதாரிகள் என மொத்தம் 965 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய சிவன், “கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி நாட்டின் முன்னேற்றம் ஆகும். பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் முழு முயற்சியால் மாணவர்களின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. 2050 ஆம் ஆண்டு உலக ஜனத்தொகை 9.5 பில்லியனாக இருக்கும்.

உணவு தேவைகள் 56 சதவீதம் உயரும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே ஏற்படும். உலகம் முழுவதும் வெப்பநிலை உயரும். காற்று மாசு ஏற்படும். 76 சதவீதம் எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும். தங்கத்தை விட தண்ணீர் மிக உயர்ந்த பொருளாக கருதப்படும்.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை!

பட்டங்கள் பெற்ற பின்னர் வேலைவாய்ப்பினை தேடாதீர்கள். மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்கள் வகுத்துள்ளன. அதில் வேலைவாய்ப்பினை உருவாக்க திட்டமிட வேண்டும். வரும் காலங்களில் கரோனா போன்ற நோய்களின் பிரச்னைகளிலிருந்து தீர்வு காண, விஞ்ஞான ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள்” என பேசினார்.

விழாவில், கல்லூரி தலைவர் எம்.விமல், கல்லூரி செயலாளர் சி.லிக்மிசந்த், கல்லூரி முதல்வர் முனைவர் இன்பவள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கே. ராஜேஷ்குமார் ஜெயின், ஆர். ஆனந்தகுமார் ஜெயின், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details