தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட ஆண் சடலம்; விசாரணைக்காக ஆந்திரா விரைந்த போலீஸ் தனிப்படை..! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

Tirupathur Unidentified Male corpse case: திருப்பத்தூர் அருகே சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் விவரங்கள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:01 AM IST

திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பலகாவப்பலி பகுதியில் உள்ள, முருகன் கோவில் மலை அடிவாரத்தில் கடந்த (நவ.21) பலத்த காயங்களுடன் நிர்வாணப்படுத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக, அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈட்டுப்பட்டிருந்தவர்கள் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இறந்தவரின் அடையாளம் குறித்தும், அவர் கொலை செய்யப்பட்டதன் காரணம் குறித்தும், கடந்த 12 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தி புதைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கத்தாரி கிராமம் அடுத்த மல்லகுண்டா கொய்யான் கொல்லை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பதும், இவர் கடந்த நவம்பர் 15ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர், நெடுநாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

அதனை அடுத்து, விஜயகுமாரின் தந்தை ராஜா தனது மகனை காணவில்லை என திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், கொலை செய்து புதைக்கப்பட்ட சடலத்தின் அடையாளங்களை ராஜா மற்றும் அவரது உறவினர்களுக்கு காண்பித்த போது அவர் காணமால் போன விஜயகுமார் என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து, விஜயகுமாரின் தந்தை ராஜா தனது மகனை காணவில்லை என திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், கொலை செய்து புதைக்கப்பட்ட சடலத்தின் அடையாளங்களை ராஜா மற்றும் அவரது உறவினர்களுக்குக் காண்பித்த போது அவர் காணமால் போன விஜயகுமார் என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து, காவல்துறையினர் ராஜா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, விஜயகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்ததும். அவருக்கு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வினிதா என்பவருடன் திருமணம் ஆகியுள்ளதும், மேலும் கடந்த மாதம் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையில் வனிதா தனது தாய் வீட்டிற்குச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், இறந்த விஜயகுமார், அவருடைய மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேரேதேனும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கை விசாரிக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான தனிப்படை காவல்துறை அதிகாரிகளுக்கு, விஜயகுமாரை கொலை செய்தவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் தற்போது ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க:கும்பகோணம் ஓரினச் சேர்க்கையில் இளைஞர்கள் கொலை வழக்கு.. போலி நாட்டு வைத்தியரிடம் போலீசார் தீவிர விசாரணை..!

ABOUT THE AUTHOR

...view details