திருப்பத்தூர் மாவட்டம், மிட்டூர் ஓமகுப்பம் ஏரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியதை மறைத்து சின்ன கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் (42) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர்.
பெரிய மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகள் சிறுநீரகம் செயல் இழந்து மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மனைவியின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வதை ரவி வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
மனைவியைக் கொலை செய்த கணவர் ரவி இந்நிலையில், நேற்று (பிப்.15) இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ரஞ்சிதத்தின் கழுத்தை அறுத்து ரவி கொலை செய்து விட்டு, ஆலாங்காயம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த ரஞ்சிதத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மனைவியைக் கொலைசெய்த ராணுவ வீரருக்கு போலீஸ் வலை!