தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு! - இருசக்கர வாகன விபத்து

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு
கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு

By

Published : Sep 30, 2020, 8:50 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜங்களாபுரம் பூசாரி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (62). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. முதல் மனைவி புஷ்பா (55), ஜங்கலபுரம் பூசாரி வட்டத்தில் வசித்துவருகிறார். இரண்டாவது மனைவி ரஞ்ஜிதம், ராஜாவுடன் புள்ளுர் பகுதியில் வசித்துவருகிறார்.

இந்நிலையில், முதல் மனைவி புஷ்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், ஜங்களபுரம் பகுதிக்கு தனது இரண்டாவது மனைவி ரஞ்சிதத்துடன் சென்ற ராஜா, புஷ்பாவை பார்த்து பிறகு புள்ளூர் பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, நாட்றம்பள்ளி அருகேவுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், வாகனத்திலிருந்து, தூக்கி வீசப்பட்ட தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லியில் கூட்டத்தில் மோதிய பேருந்து: 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details