திருப்பத்தூர்:தமிழ்நாடு முழுவதும் 11.01.2022 அன்று அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைபடங்கள் திரைக்கு வருவதையொட்டி, இரு நடிகர்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைக் காண உள்ள நிலையில் உள்ளனர்.
ஆம்பூரில் 'துணிவு' படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்த 100 அடி பேனர்! - ஆம்பூரில் அஜித்துக்கு பேனர்
ஆம்பூரில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் 'துணிவு' படத்திற்காக அஜித் ரசிகர்கள் பேனர் வைக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆம்பூரில் 'துணிவு' படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்த 100 அடி பேனர்!
இதையடுத்து ஆம்பூரில் உள்ள ராஜ்கமல் திரையரங்கத்தில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்காக 100 அடி பேனரை அடித்துள்ளனர். மேலும் ஆம்பூரில் சென்னை - பெங்களூரு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள திரையரங்கம் அருகே அஜித் ரசிகர்கள் 100 அடி பேனரை வைக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Thunivu: துணிவு படத்தின் கதை இது தான் - இயக்குநர் எச்.வினோத்