திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புருஷோத்தம குப்பம் கிராமத்தில் அய்யம்மாள் என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு எழுதி அய்யம்மாலுக்கு சேர வேண்டிய பணத்தை அலுவலர்கள் வழங்காததால் அய்யம்மாள் குடிசை வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜூலை 9ஆம் தேதி இரவு பெய்த மழையில் குடிசையின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அய்யம்மாளுக்குக் கடந்த 2017-18ஆம் ஆண்டுகளில் வீடு ஒதுக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அலுவலர்கள் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.