திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணப்பள்ளி பனந்தோப்பை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (69). இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (டிச.27) நள்ளிரவு முகமது இஸ்மாயிலின் வீட்டின் பெரும் பகுதி இடிந்து விழுந்துள்ளது.
தொடர்மழை காரணமாக ஆம்பூரில் வீடு இடிந்து விபத்து! - திருப்பத்தூர் செய்திகள்
ஆம்பூர் அருகே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு இடிந்து விபத்து ஏற்பட்டது.
ஆம்பூரில் வீடு இடிந்து விபத்து!
இந்த விபத்தின்போது முகமது இஸ்மாயில் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல - போலீஸ் விளக்கம்