தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெஎன்1 வகை தொற்றுக்கு மருத்துவமனைக்கு வர தேவையில்லாத நிலை இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - hospital inspection

Minister inspection in hospitals: மருத்துவத்துறை வரலாற்றிலேயே தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவு திருப்பத்தூர் மாவட்டத்தில் 119 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு மருத்துவமனை மேம்பாட்டு வசதிகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 5:09 PM IST

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு மருத்துவமனை மேம்பாட்டு வசதிகள்

திருப்பத்தூர்:ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் வருகை 2 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் நோயாளிகளிடம் விசாரித்தபோது, மருத்துவமனை சேவை மிகச் சிறப்பாக இருப்பதாக பொதுமக்கள் கூறினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை புதிய மாவட்டமாக அறிவித்த சூழலில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தமிழக முதல்வரால் மேம்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தருவதற்கும், அதிகபட்சமான மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் வசதியாக, 24 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 மாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கேராளவின் ஓபிஎஸ் நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!

இன்னும் 10 மாதங்களில் ஆம்பூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் பொதுப்பணித் துறையினர் மூலம் கட்டி முடிக்கப்படும். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தீவிர சிகிச்சை மையம் மற்றும் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 119 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு கட்டுமானp பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவத்துறை வரலாற்றிலேயே வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணி, மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஆம்பூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேவையான வசதிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கூறி, மத்திய அரசின் மூலம் பெற்றுத் தரப்படும்.

தற்போது பரவி வரும் ஜே.என் 1 வகை கரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது, இது ஒரு மிதமான நோய் தொற்று, ஒரு மூன்று நாட்களிலேயே சரியாகி விடும் நிலையில் இருக்கிறது. இதற்காக யாரும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்ற நிலை இருக்கிறது, ஆனாலும் அரசு தயாராக இருக்கிறது.

மேலும், பொது சுகாதாரத்துறையின் முன்னறிவிப்பின்படி நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது வெளியில் செல்லும்போது முககவசங்களை அணித்து கொண்டு செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார். மேலும் இந்த ஆய்வில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பால் மாரடைப்புகள் ஏற்படுகிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

ABOUT THE AUTHOR

...view details