திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம் மடிவாளா பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (92). இவர் தனது குடும்பத்துடன் தனது மகள் சவிதா (56) அமெரிக்க செல்லவுள்ளதால் வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு இனோவா காரில் சென்றனர். அப்போது நரசிம்மன் குடும்பத்தினர் 5 பேர் மற்றும் கார் ஓட்டுநர் மகேஷ் உள்பட ஆறு பேர் சென்னை நோக்கி நாட்றம்பள்ளி சண்டியூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வெலக்கல்நாத்தம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு (41) காரில் குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநர் சாதியா உள்பட ஆறு பேர் வெலக்கல்நாத்தம் இருந்து ஆம்பூரில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த இரண்டு கார்களும் நேர் எதிரே மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 11 பேரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.