கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட கருப்பர் கூட்டம் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் திருப்பத்தூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார்.
'பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியது திராவிடர் கழகம்தான்'- அர்ஜுன் சம்பத்! - தேசியப் பாதுகாப்புச் சட்டம்
திருப்பத்தூர்: கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியது திராவிடர் கழகத்தின் வேலைதான் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியது திராவிடர் கழகம்தான்'- அர்ஜுன் சம்பத்
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிறர் மனதை புண்படுத்தும் விதமாக பேசி வரும் கருப்பர் கூட்டத்தின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசப்பட்டது, திராவிடர் கழகத்தின் வேலைதான். இந்து அமைப்புகள் யாரும் இதைச் செய்திருக்க மாட்டார்கள். காவியை நாங்கள் புனிதமாக கருதுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் நாத்திகன் சரண்!